கொடுமையான சம்பவம்: கொலை செய்யப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்ட மனநோயாளி

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியதால், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற பெயரில் மக்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள பழவேற்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மன நோயாளி ஒருவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் சடலத்தை கைப்பற்றிய மக்கள், உப்பு நீர் ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தின் மேலிருந்து கயிற்றால் கட்டி தொங்க விட்டுள்ளனர்.

இது குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்திற்கு வந்து மன நோயாளியின் சடலத்தை காவலர்கள் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கூறும் அப்பகுதி மக்கள் சிலர், அவர் குழந்தை கடத்தும் நபர் இல்லை எனவும், கடந்த சில மாதங்களாக மனநிலை பாதித்து சுற்றி திரிந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களின் தாக்கத்தால் அவரை மக்கள் சிந்திக்காமல் அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.

மக்களுக்கு யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு காவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers