தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது: கர்நாடகா அறிக்கை தாக்கல்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்துக்கு ஏற்கனவே கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டுள்ள நிலையில், தற்போது தண்ணீர் திறந்து விட முடியாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை மே 3ம் திகதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடகா தேர்தலை காரணம் காட்டி, வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசம் கேட்டது.

ஆனால் காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், உடனடியாக தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

அடுத்த கட்ட விசாரணையை 8ம் திகதிக்கு ஒத்திவைத்த நிலையில், இன்று கர்நாடகா சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட அளவைவிட 16.66 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது, அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 116.74 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது, கர்நாடகத்தின் தேவைக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது, எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers