கொள்ளையடித்தது எதற்காக? வாக்குமூலம் அளித்த நபர்

Report Print Trinity in இந்தியா

தான் முதியோர் இல்லம் கட்டுவதற்காகத்தான் கொள்ளையடித்ததாக பொலிசில் வாக்குமூலம் அளித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள நொளம்பூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. அப்பகுதி மக்கள் பொலிசில் புகார் அளித்ததன் பேரில் அங்குள்ள பாதுகாப்பையும் கண்காணிப்பையும் அதிகப்படுத்தியது பொலிஸ்.

அப்போது அந்தக் கொள்ளையனைக் கண்டுபிடிக்க அங்குள்ள CCTV கேமராக்கள் மூலம் ஆதம்பாக்கத்தை சேர்ந்த சேகர் (52) என்பவன் இந்த தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. திருவேற்காட்டில் வைத்து இவனை கைது செய்த பொலிசார் விசாரணையின் மூலம் மேலும் பல தகவல்களை சேகரித்துள்ளனர்.

சேகரின் குடி பழக்கத்தால் அவரது மனைவியும் குழந்தைகளும் பிரிந்து விட்டனர். 2006ல் குடிப்பழக்கம் காரணமாக ஏற்பட்ட தகராறில் சிறை சென்ற சேகர் வெளியில் வந்து எம் ஏ சைக்காலஜி படித்துள்ளான். அது மட்டுமின்றி சென்னையில் சொந்தமாக போதை மறுவாழ்வு மையம் ஒன்றையும் நடத்தியுள்ளான்.

தனது அம்மாவின் பெயரில் முதியோர் இல்லம் கட்ட விரும்பிய சேகர் அதற்கான மூலதனத்திற்கு கொள்ளையடிப்பதை தேர்ந்தெடுத்துள்ளான். இதன் மூலம் வசதியானவர்களிடம் இருந்து சுமார் 120 பவுன் நகை வரை கொள்ளையடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை நொளம்பூரை சேர்ந்த ஆறு குடியிருப்புகளில் கொள்ளையடித்த பணத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை எனும் ஊரில் இடத்தையும் வாங்கியிருக்கிறான்.

முதியோர் இல்லம் கட்ட தொடங்கும் நேரத்தில் திருவேற்காட்டில் வைத்து சேகரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட 120 பவுன் நகைகளில் 50 பவுன் மற்றுமே கைப்பற்ற பட்டதால் மேலும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டிருக்கிறது பொலிஸ். நீதிபதி இந்த கோரிக்கையை ஏற்று சேகரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers