பியூன் வேலை பார்ப்பவரிடம் ரூ.10 கோடி சொத்து: ஆந்திராவை அதிரவைத்த ரெட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து கழக அலுவலகத்தில் பியூன் வேலை பார்ப்பவரிடம் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பியூன் வேலை பார்க்கும் நரசிம்ம ரெட்டியிடம் வருமானத்திற்கும் அதிகமான சொத்து இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

கணக்கில் வராத ரூ.7 லட்சம் ரொக்கப்பணம், 2 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.20 லட்சம் வங்கி கணக்குகள் மற்றும் பிளாட் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.

அவர் வாங்கிய அனைத்து குடியிருப்புகளும் 250 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்தன. இவ்வாறு அவருக்கு 18 வீடுகள் உள்ளன.

ரூ.1 கோடி மேலான எல்ஐசி எடுத்து உள்ளார். மற்றும் 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சொத்துக்கள் இவரது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்டு உள்ளன.

பெரும்பாலும் அவரது மனைவி ஹரிபிரியா மற்றும் அவரது தாயார் நாராயணம்மா பெயரில் வாங்கப்பட்டு உள்ளது.

இவற்றின் மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது. சாதாரண பியூனுக்கு இவ்வளவு சொத்து வந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஆந்திரா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நரசிம்ம ரெட்டியின் மாத சம்பளம் ரூ. 40 ஆயிரம் ஆகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...