மனைவி, பிள்ளையுடன் விஷம் குடித்து தற்கொலை செய்த நபர்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் கடன் தொல்லையால் மனைவி, பிள்ளையுடன் நபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தின் ஆத்தூர் அருகே தம்மம்பட்டி புலிகரடு பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுணன்(வயது 50).

இவருக்கு வெண்ணிலா(வயது 35) என்ற மனைவியும், மோகன்(வயது 12), பிரகாஷ்(வயது 8) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

விவசாய செலவுக்காக அதே ஊரை சேர்ந்த நபரிடம் ரூ.3 லட்சம் கடனாக அர்ச்சுணன் வாங்கியுள்ளார்.

சொன்ன நேரத்தில் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்தவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இதன்படி நேற்றிரவு அனைவருக்கும் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்துள்ளனர். அனைவரும் மயங்கி விழ மூத்த மகன் மோகன் காலையில் கண்விழித்து பார்த்துள்ளார்.

குடும்பமே சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன் கதறித்துடிக்க, அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

மோகனையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அர்ச்சுணனுக்கு கடன் கொடுத்த நபர் யார்? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்