ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற பெண் அதிகாரி சுட்டுக்கொலை: அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிய அரசு பெண் அதிகாரி, சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலம், சோலான் மாவட்டத்தில் உள்ள கசவுலி என்ற மலைப்பாங்கான பகுதியில், பலர் விதிமுறைகளை மீறி உணவகங்கள் கட்டியுள்ளனர்.

இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் உடனே அகற்றப்பட வேண்டும் என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, நகர திட்டமிடல் துறை பெண் அதிகாரி ஷாலி பால ஷர்மா என்பவர், சக அதிகாரிகளுடன் உணவகங்கள் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

அப்போது, விதிமுறைகளை மீறி கட்டியுள்ளதால் ஒரு வாரத்திற்குள் உணவகங்களை அகற்ற வேண்டும் என அதன் உரிமையாளர்களை ஷாலி எச்சரிக்கை செய்துள்ளார்.

இதனால் உணவகங்களின் உரிமையாளர்களுக்கும், பெண் அதிகாரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் அங்குள்ள உணவகத்தின் உரிமையாளர் விஜய் சிங் என்பவர், தனது துப்பாக்கியால் பெண் அதிகாரியை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டினால் மற்றொரு அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிக்கு ஏன் பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை? என்று உச்சநீதிமன்றம், அம்மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி பதிலளிக்குமாறு பொலிசாருக்கு உத்தவிடப்பட்டுள்ளது.

HT Photo

Express Photo: Jaipal Singh

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...