பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகர் விவேக்கின் கருத்து

Report Print Kabilan in இந்தியா

நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் கொமெடி நடிகராக உள்ளவர் நடிகர் விவேக். தனது படங்களில் கொமெடி கலந்த பகுத்தறிவு கருத்துக்களை தெரிவித்து வருபவர். இதன் மூலம், ‘ஜனங்களின் கலைஞன்’, ‘சின்ன கலைவாணர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘அன்பார்ந்த மாணவர் செல்வங்களே.. குழந்தைகளே.. உங்களின் கோடை விடுமுறையை அனுபவியுங்கள். அதேநேரம் விளையாடி முடித்த பிற்பாடு அதிகமாக தண்ணீரை குடியுங்கள்.

பெண் பிள்ளைகள் உங்களின் அம்மாவுடன் போய் அடுப்படியில் எப்படி சமையல் செய்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். ஆண் பிள்ளைகள் உங்கள் தந்தையுடன் போய் அவர் பணிபுரியும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள்’ என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. மேலும், பெண்கள் பலர் விவேக்கின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட் செய்து வருகின்றனர்.

பெண் பிள்ளைகள் அடுப்படியில் தான் இருக்க வேண்டுமா? இதுதான் உங்கள் பகுத்தறிவுக் கொள்கையா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை இந்தப் பெண் அடிமை மனோநிலையில் இருந்து விடுவிக்க முடியாதா? எனவும் தங்களது கேள்விகளை தொடுத்துள்ளனர்.

இந்நிலையில், விவேக் தனது ட்விட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தாயிடம் இருந்து சமையலையும் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் இந்த விடுமுறைக் காலத்திலாவது தெரிந்து கொள்க என்ற என் பதிவை, அனைத்து பெற்றோரும் ஆமோதிப்பர். என்னைப் புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...