திருமணத்துக்கு அழைத்து செல்லாத கணவன்: தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி

Report Print Trinity in இந்தியா

சென்னையில் உறவினர் திருமணத்திற்கு செல்ல முடியாததால் மனமுடைந்த கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள திருப்பூர் குமரன் பகுதியை சேர்ந்தவர்கள் நரேந்திரன்(38)- அனிதா (34) தம்பதியினர்.

பெற்றோர்கள் நடத்தி வைத்த திருமணத்தில் அவ்வப்போது சிற்சில சண்டைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் நடந்ததில்லை.

இந்நிலையில் நேற்றிரவு தனது உறவினர் திருமணத்திற்காக நரேந்திரன் தனது முதல் குழந்தையுடன் ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது தானும் உடன் வருவதாக அனிதா கேட்டிருக்கிறார், அவரது கர்ப்பத்தை காரணம் காட்டிய நரேந்திரன், இந்த நிலையில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு தான் மட்டும் சென்றிருக்கிறார்.

இதனால் மனமுடைந்த அனிதா திருமணத்திற்கு செல்ல முடியாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊரிலிருந்து திரும்பிய நரேந்திரேன், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்ததும் உடனடியாக பதறித்துடித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திரன் மீது வழக்கு பதிந்த பொலிஸ் திருமணமாகி நான்கு ஆண்டுகளில், இந்த மரணம் நிகழ்ந்ததால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers