பசுமாட்டின் மீது புகார் அளித்த தொழிலதிபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் தனக்கு நேர்ந்த விபத்துக்கு காரணமான பசு மாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், கடந்த ஏப்ரல் 27-ம் திகதி மாதா ஷெர்வாலி மார்க்கெட் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு திடீரென ஓடி வந்த பசு மாடு ஒன்று என் வாகனத்தின் மீது வேகமாக மோதியது.

இதனால், நான் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டேன். எனது கால் முறிந்துவிட்டது. என்னை ஆம்புலன்ஸில் கொண்டுபோய் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்துக்குக் காரணமான அந்த மாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், மாட்டையும், உரிமையாளரையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், விபத்து நடந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கமெரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers