ஐஸ்வர்யா ராயிடம் அந்த அழகு உள்ளது: முதல்வர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சேற்றை பூசி குளித்த இந்திய பெண்களே இன்று சோப்பை பயன்படுத்துகிறார்கள் என திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அழகு சாதனப்பொருட்களை விரிவுபடுத்துவதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய பெண்களுக்கு இந்திய அழகி போட்டி, மற்றும் உலக அழகி, பிரபஞ்ச போட்டி வைக்கிறார்கள்.

ஆனால், இந்திய பெண்கள் இயற்கையான முறையிலேயே தங்கள் அழகினை பராமரித்து வந்தார்கள். வெந்தய தண்ணீரை ஊற்றி தலைமுடியை பராமரித்தார்கள், சேற்றை பூசி குளித்தார்கள்,

ஆனால், இன்று சோப்பு, ஷாம்பு என அழகுசாதனப்பொருட்கள் அதிகரித்துவிட்டது. அழகி போட்டி மூலம் 125 கோடி மக்கள் தொகையில், பாதியளவு உள்ள இந்திய பெண்களை கவர்ந்திழுக்கிறார்கள்.

உலக அழகி போட்டி நடத்துபவர்கள் சர்வதேச மாபியாக்கள். இந்தியாவில் இருந்து இதுவரை ஐந்து பேர் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.

டயானா ஹைடன் கூட வென்றுள்ளார். ஆனால், அவரிடம் இந்திய அழகை நான் காணவில்லை. ஐஸ்வர்யா ராயிடம் அந்த அழகு உள்ளது, அவர் இந்திய பெண்களை பிரதிபலிக்கிறார் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers