எனக்கே இந்த நிலைமையென்றால் ரஜினி மற்றும் கமலுக்கு சொல்லவா வேண்டும்? சிம்பு

Report Print Kabilan in இந்தியா

நடிகர் சிம்பு, எனக்கே இந்த நிலைமை என்றால் ரஜினி, கமலுக்கு சொல்லவா வேண்டும் என்று காவிரி விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக பேசிய நடிகர் சிம்பு, கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து ஆதரவு தெரிவிக்குமாறு கர்நாடக மக்களை கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அவரின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மக்களும், தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அரசியலில் களமிறங்கியுள்ள கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் ஏன் இப்படி எதுவும் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள சிம்பு கூறுகையில், ‘கர்நாடக மக்கள் கெட்டவர்கள் இல்லை. மக்களின் பெயரை வைத்து காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ள பிம்பத்தை உடைக்க நினைத்தேன்.

அரசியலுக்குள் இருக்கும் அரசியலை வெளியேற்ற வேண்டும். சிம்பு மாதிரி ரஜினி, கமல் ஏன் சொல்லவில்லை என்று கேட்பதே தவறு. நான் சொன்னதற்கு நான் தமிழனே இல்லை என்றார்கள்.

தமிழ்.. தமிழ் என்று சொல்லும் நான், சிலம்பரசன் என்று பெயர் வைத்திருக்கும் நான், டி.ராஜேந்தர் மகனாக பிறந்த நான், ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுக்க வேண்டும் என சொன்ன எனக்கே இந்த நிலைமை என்றால் அவர்களை சொல்லவா வேண்டும்.

நான் கமல் சார் கட்சியும் கிடையாது, ரஜினி சார் கட்சியும் கிடையாது. அவர்களால் அந்த விடயத்தை எடுத்துச் சொல்ல முடியாது. ஏனென்றால் உடனே அரசியல் பக்கம் திருப்புவார்கள், அரசியலாக்கிவிடுவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers