ஆஷிபா கொலை: மோடியை விளாசிய அமெரிக்க நாளேடு

Report Print Trinity in இந்தியா

சமீப காலமாக இந்தியாவில் பெண்கள், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தவறான முறையில் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த சிறுமி ஆஷிபாவின் கொலையும் அதைத் தொடர்ந்த அதே வயதுகேற்ற குழந்தைகளின் மரணமும் இந்தியாவில் குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அதுமட்டுமல்ல நடந்தேறிய கொலைகளுக்கு மத வர்ணம் பூசி தங்கள் மத வெறிகளை சிறு குழந்தைகளிடம் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர் சில மிருகங்கள்.

இது குறித்து தி நியூ யார்க் டைம்ஸ் எனும் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் குறி வைத்து பிரசாரம் செய்து தாக்கப்படுகின்றனர்.

இதைக் கண்டிக்க வேண்டிய மோடி மௌனம் காத்து வருவது நியாயமல்ல. இதற்கு வரும் தேர்தலில் மோடி அரசியலில் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்று அப்பத்திரிகை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers