செய்தியாளர் சந்திப்பில் பெண் நிரூபரின் கன்னத்தை தட்டிய ஆளுநர்: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

நிர்மலா தேவி விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, பெண் நிரூபர் ஒருவரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை உயர் அதிகாரிகளின் ஆசைக்க இணங்கும் படி கூறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

அந்த ஆடியோவில் தமிழக ஆளுநர் குறித்தும் பேச்சு எழுந்தால், இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நிர்மலாதேவி என்பவர் யாரு என்றே எனக்கு தெரியாது எனவும் அவர் முகத்தை நான் பார்த்ததே கிடையாது என கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பெண் நிரூபர் ஒருவர் கேள்வி கேட்க முற்பட்டுள்ளார். அந்த நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் அந்த பெண் நிரூபரின் கன்னத்தை தட்டியுள்ளார்.

அந்த பெண் நிரூபர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆளுநர் கன்னத்தில் தட்டியது தமக்கு அருவருப்பாக உணர்ந்ததால் முகத்தை பலமுறை கழுவி சுத்தப்படுத்தியதாக விளக்கமளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers