நிர்மலாதேவி விவகாரம்: ஆளுநர் பரபரப்பு பேட்டி

Report Print Santhan in இந்தியா

நான் பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தை கூட பார்த்ததே கிடையாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக உள்ள நிர்மலா கல்லூரி மாணவிகளிடம் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும் படி பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, அவரின் வீட்டை உடைத்து பொலிசார் கைது செய்தனர்.

அதன் பின் பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அனைத்திற்கு ஒத்துழைப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகியது. நிர்மலா பேசிய ஆடியோவில் முக்கியத் அதிகாரிகள் பலர் தெரியும் என்றும் கூறியிருந்ததார்.

இந்நிலையில் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அப்போது, தமிழக ஆளுநராக பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவுபெற்று பெற்றுள்ளது. பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தை கூட நான் பார்த்ததில்லை.

என் அனுமதியின்றி யாரும் என்னை நெருங்க முடியாது. எனக்கு பேரன் பேத்திகள் இருக்கும் போது , என்னை பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம்.

அதுமட்டுமின்றி பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சட்டவிதிகளின்படியே, சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரி சந்தானம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே சி.பி.ஐ விசாரணை குறித்தெல்லாம் முடிவு செய்ய முடியும்.

ஆனால் தற்போது அதற்கான தேவை இல்லை, பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதிகளின் படி ஆளுநரே அதன் வேந்தர் என கூறியுள்ளார்

மேலும் மாணவிகளை தவற வழி நடத்தியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் நிர்மலா தேவியைப் பற்றியே கேள்வி கேட்டதால், அவர் மிகவும் ஆத்திரப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers