மனைவியுடன் சண்டைபோட்ட காதலியை 11 துண்டுகளாக வெட்டிய காதலன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சூரத் மாநிலத்தில் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டைபோட்டு பணம் கேட்டு மிரட்டிய தனது காதலியை கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று, ஷேக் தனது காதலி சுலேக்காவை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த தனது காதலியை 11 துண்டுகளாக வெட்டியுள்ளார்.

கால், கைகளை முதலில் பெட்டிக்குள் வைத்து அகற்றியுள்ளார். பின்னர், தலையை தனது வீட்டில் வைத்திருந்த போது பொலிசின் பிடியில் சிக்கியுள்ளார்.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், தனது மனைவியுடன், சுலேக்கா தொடர்ந்து சண்டை போட்டு வந்ததாகவும், 20,000 பணம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளதாகவும் இதனால் தான் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

திருமணத்திற்கு முன்னர் ஷேக், சுலோக்காவை காதலித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஷேக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...