72 மணிநேரத்தில் 5000 முறை: இந்திய போர் விமானங்கள் செய்த சாதனை

Report Print Kabilan in இந்தியா

இந்திய போர் விமானங்கள், 72 மணிநேரத்தில் 5 ஆயிரம் முறை வானில் பறந்து சாதனை படைத்துள்ளன.

கடந்த 10ஆம் திகதி, சீனா மற்றும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள இந்திய எல்லைகளில், இந்திய விமானப்படையும், ரஷ்யப் படையும் இணைந்து ககன்சக்தி என்ற போர் பயிற்சியை தொடங்கின.

இந்தப் பயிற்சியில் முதற்கட்டமாக, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் போர்பயிற்சியில் ஈடுபட்டன.

இதில், 72 மணிநேரத்தில் இந்த விமானங்கள் சுமார் 5 ஆயிரம் முறை வானில் பறந்து சாதனை படைத்துள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், இந்த இரண்டு வார காலப் பயிற்சி, இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவு உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பங்கேற்க உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள், ரேடார் மற்றும் கண்காணிப்பு கருவிகளும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த பயிற்சியின் நோக்கம், விமானப் படையின் போர் தொடுக்கும் திறனைச் சோதிப்பதாகும் என தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சியானது வரும் 23ஆம் திகதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers