ஆஷிபா மரணம்: நடிகர் விஜய் சேதுபதி ஆவேசம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமியான ஆஷிபா மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, இறந்து கிடந்தது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் ஆஷிபா மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

பொதுமக்கள் சிலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நரேந்திர மோடி சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரத்தில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரபல திரைப்ப்ட நடிகரான விஜய் சேதுபதி கத்துவா சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது.

மத பாகுபாடு பார்ப்பவர்களிடம் இருந்து நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...