மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய நிர்மலாவுக்கு ஏசி அறை: ராமதாஸ் தகவல்

Report Print Santhan in இந்தியா
230Shares
230Shares
ibctamil.com

தமிழகத்தில் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய ஆசிரியை நிர்மலா தேவிக்கு குளீருட்டப்பட்ட அறை கொடுப்பட்டுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக உள்ள நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் சில பேரிடம் மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும் படியும் இதன் மூலம் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமின்றி பணம் நிறைய கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று நிர்மலா தேவியின் வீட்டை சுற்றி வளைத்த பொலிசார், வீட்டின் கதவை உடைத்து கைது செய்தனர். அதன் பின் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலில்தான் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் வழிநடத்த நிர்மலாதேவி முயன்றுள்ளார் எனவும் அதற்கான ஆதரங்கள் கிடைத்துள்ளதால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், பல்கலைக்கழகத்தின் அதிகாரவரிசையில் உதவிப் பேராசிரியர் என்பவர், அதிலும் குறிப்பாக தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு பல்கலைக்கழகத்தில் எந்த ஒரு மரியாதையும் இருக்காது.

ஆனால் நிர்மலா தேவிக்கோ குளீருட்டப்பட்ட அறையை பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிகள் ஆய்வுத்துறை தலைவராகவும் பல்கலைக்கழக மானியக்குழுவின் மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநருமாக இருக்கும் வி.கலைச்செல்வன் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி அவர் 10 நாட்களுக்கு மேலாக தங்கி அவருடைய சொந்த வேலைகளை எல்லாம் கவனித்திருக்கிறார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளைச் செய்து கொடுப்பதாக நிர்மலா தேவி தொலைப்பேசியில் பேசியுள்ளதால், இதில் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகளுக்கு நிச்சயம் தொடர்பு இருக்கும் என்பதால் நிச்சயமாக இது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏற்கனவே குறிப்பிட்டது போல 95241 36928 இந்த எண்ணில் நிர்மலா தேவியுடன் யார், யாரெல்லாம் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற விவரங்களையும் கண்டறிந்து பட்டியலிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்