மீண்டும் ஒரு ஆஷிபா! இந்தியாவில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை

Report Print Raju Raju in இந்தியா
127Shares
127Shares
ibctamil.com

உத்தரபிரதேசத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Etah மாநகராட்சியை சேர்ந்த 8 வயது சிறுமி அங்குள்ள ஒரு பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஞாயிற்று கிழமை அன்று கலந்து கொண்டுள்ளார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் சிறுமியை ஏமாற்றி அங்கிருந்து அழைத்து சென்று அவரை கற்பழித்து விட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் சடலத்தை பொலிசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியான சோனுவை கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி அகிலேஷ் குமார் கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இச்சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்