கர்நாடகக்காவியின் தூதுவர் ரஜினி: பாரதிராஜா கண்டன அறிக்கை

Report Print Athavan in இந்தியா
138Shares
138Shares
ibctamil.com

காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடத்திய போரட்டத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்த ரஜினிக்கு இயக்குனர் பாரதிராஜா இன்று கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

சிலர்(ரஜினி) காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடத்திய போரட்டத்தில் நடந்ததை வன்முறை என்கின்றனர். அது வன்முறையல்ல; எதிர்வினை என்று பாரதி ராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி வெறும் வாய் மட்டுமே அசைக்கிறார் ஆனால் அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர்.

காவிரிக்காக அனைவரும் ஒன்று கூடி எதிர்க்குரல் கொடுத்த போதும் அங்குள்ள காவலர்கள் தமிழர்களை துரத்தி துரத்தி அடித்த போதும் வாய் திறக்காத நீங்கள் இன்று தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு தமிழனிடம் உறிஞ்சிய இரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்களே!

இப்போது தான் பட்டவர்த்தனமாக தெரிகிறது நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக்காவியின் தூதுவர் என்று !

உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது என்று ரஜினிக்கு இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாங்கள் போராட்டத்துக்கு செல்லும் போது எங்களுடைய போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள் அடிக்கத் தொடங்கினர்.

இதில் ஆத்திரமடைந்த இரண்டு போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால், நாங்கள் காவலர்களை தடுக்கவே சென்றோம்.

மோதலை சமாதானம் செய்யவே சென்றோம். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் நடிகர் ரஜினிகாந்த் நாங்கள் காவலர்களை வேண்டுமென்றே தாக்குவது போல் டுவிட்டரில்கருத்து வெளியிட்டுள்ளார்.

ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார்; அவரை கட்டுப்படுத்தி அவருக்கு பின்னால் உள்ள வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர் என்பது தற்போது தெளிவாகிறது.

பேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பார்த்து பேசுங்கள். ரஜினி வீட்டு சாப்பாடு, குடிநீருக்கும் சேர்த்துதான் வீரத்தமிழ் இளைஞர்கள் தடியடியில் ரத்தம் சிந்தினர். கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோதும் குரல் கொடுக்காமல் தற்போது மட்டும் குரல் கொடுப்பது ஏன். தமிழர்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம் என்று பாரதிராஜா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்