நடைப்பயிற்சி சென்ற வியாபாரி ஓட ஓட விரட்டி கொலை: அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா
79Shares
79Shares
ibctamil.com

தமிழகத்தில் நடைப்பயிற்சி சென்ற மீனவர், ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேடவாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன், மீன் வியாபாரம் செய்து வந்த இவர், இன்று அதிகாலை தனது வீட்டின் அருகில் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது மர்ம கும்பல் ஒன்று சீனிவாசனை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதனால் கொலை கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடிய சீனிவாசனை, அந்த கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியதில் கழுத்து, தலை, கை, கால்களில் பல வெட்டு விழுந்தது.

அதன் பின்னர், அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே சீனிவாசன் உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து, அந்த மர்ம கும்பல் தப்பியோடியது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சீனிவாசனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீனிவாசனுக்கு மனைவியும், மகனும் உள்ளனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்