நார்கோ சோதனைக்கு தயார்: ஆஷிபா கொலை வழக்கு குற்றவாளி ராம்

Report Print Fathima Fathima in இந்தியா
505Shares
505Shares
ibctamil.com

கத்துவா சிறுமி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என நீதிபதி முன் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஆஷிபா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் சிறுவர் உட்பட எட்டு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், எட்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, நார்கோ சோதனைக்கு தயார் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை 28ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்பின்னர் வாகனத்தில் இருந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய ராம் என்ற குற்றவாளி, நார்கோ சோதனைக்கு பின் உண்மைகள் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

நார்கோ சோதனையில், குற்றவாளிக்கு மயக்க மருந்து கொடுத்து வழக்கு தொடர்பாக தகவல்கள் பெறப்படும், இதன்மூலம் உண்மைகள் வெட்டவெளிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்