கூட்டாக 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: மதுரையில் பரபரப்பு

Report Print Gokulan Gokulan in இந்தியா
103Shares
103Shares
lankasrimarket.com

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்பு 5 பெண்கள் கூட்டாக தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை புதியதாக் கட்டிடம் கட்டுவதற்கு புமி பூஜை நடைபெறுவதால் முதல்வர் வருகிறார்.

அதற்க்காக வருவாய் துறை அமைச்சர் உதயக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் விரராகவ ராவ் இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது, மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்த ஆறு லெட்சுமி, ஆறுமுகத் தாய், காந்திமதி, ஈஸ்வரி மற்றும் லெட்சுமி ஆகிய ஐந்து பெண்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மணணெண்னை கேனை எடுத்து வருவாய் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்பு உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர்.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்கள் கவாத் திருப்பதி, குண்டுமணி, மணி, பிரேம் மற்றும் பாண்டி. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்நிலையில், இவர்கள் கேரளாவில் கூலி வேலை செய்வதற்கு சென்றனர்.

அப்போது, அவர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரனை என்ற பெயரில் ஆஸ்டன்பட்டி காவல் நிலைத்தில் வைத்து கவாத்து திருப்பதி மற்றும் குண்டு மணியின் கால்களை உடைத்தாகவும் இருவரையும் காவல்துறைனரே அரசு மருத்துவமனையில் அனுமதித்தாகவும் தெரிவித்தனர். மேலும் கைது செய்த மற்றவர்களை பார்க்க அவர்களது தாய், தங்கையினரை அனுமதிக்கவில்லை என்றும், அனைவரையும் என்கவுண்டரில் சுட்டு விடுவோம் என்றும் காவல்துறையினர் மிரட்டியதாக கூறினார்கள்.

இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் முன்பு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்