ராஜீவ்காந்தியை போல மோடியை கொலை செய்து விடுவோம்: மிரட்டல் விடுத்த இளைஞர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொலை செய்தது போல் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்த இளைஞரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் கீழ்ப்பச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் யுவராஜ் என்கிற இளவேந்தன். இவர் தனது முகநூலில், இப்படி மிரட்டல் விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சோழவந்தான் கிராம உதவியாளர் முருகன் அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதானவர்களில் யுவராஜும் இருந்தார். இதனைதொடர்ந்து சோழவந்தான் காவல்துறையினர் யுவராஜை கைது செய்து வாடிப்பட்டி நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் மது முன்பாக ஆஜர்படுத்தினர்கள்.

யுவராஜை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்