திடீரென தீப்பிடித்து எரிந்த பிஎம்டபுள்யூ கார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் சாலை நின்றுகொண்டிருந்த பிஎம்டபுள்யூ கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

கொளத்தூர் பகுதியில் நின்றுகொண்டிருந்த பிஎம்டபுள்யூ (BMW) கார் பற்றி எரிந்ததில், காரின் ஓட்டுநர் அச்சத்தில் இறங்கி ஓடியுள்ளார்.

சற்று நேரத்தில் காரில் தீ மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்கு தாமதமானதால், மக்கள் அந்த வழியாக வந்த தண்ணீர் லொறியின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்