அவளை காட்டு பக்கம் அனுப்பியிருக்க மாட்டேன்: கதறிய ஆஷிபாவின் தாய்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜம்முகாஷ்மீரில் பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்ட ஆஷிபா என்ற சிறுமியின் பள்ளி சீருடைகளை வைத்து அவரின் தாய் கதறும் அழும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

இதில், தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் , சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பியுள்ளனர்.

இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இதனால் இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில் பெரிய அளவில் நடத்தப்படவில்லை. இப்போதுதான் மக்கள் எதிர்ப்பை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் பள்ளி சீருடைகளை வைத்து, சிறுமியின் தாய் நசீமா பிபி கண்ணீர் விடும் புகைப்படம் வெளியாகி உள்ளது. என்னிடம் அவள் நினைவாக இருப்பது இதுமட்டுதான், இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவளை காட்டு பக்கமே அனுப்பி இருக்க மாட்டேன் என்று பேட்டி அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்