கர்ப்பிணி மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த கணவன்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

வரதட்சணைக் கொடுமையால், கர்ப்பிணி மனைவியை கணவரே கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் சிவம், இவர் மனைவி மாலா (23).

இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு சிவம் குடும்பத்தார் சம்மதிக்காத நிலையில் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், திருமணத்தின் போது மாலாவின் தந்தை ரூ.5 லட்சம் வரதட்சணை தருவதாக சிவனிடம் கூறிய நிலையில் தரவில்லை. இதனால் மாலாவுடன் சிவம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 7-ம் திகதி மாலா காணாமல் போய்விட்டதாக சிவம் பொலிசில் புகார் அளித்தார்.

இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் இந்திராபுரம் பகுதியில் ஒரு பெரிய டிராவல் பேக்கில் இருந்து துர்நாற்றம் வருவதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் பேக்கை திறந்த போது அதில் பெண் சடலம் இருப்பது கண்டு அதிர்ந்தனர்.

இதையடுத்து அது காணாமல் போன மாலாவின் சடலம் என்பதை பொலிசார் கண்டுப்பிடித்தனர்.

இதனிடையில் மாலாவின் தந்தை ராம் அவதார், 5 லட்சம் வரதட்சணை தராத காரணத்தால், 5 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மகளை சிவன் கொலை செய்துவிட்டார் என்று புகாரளித்தார்.

இது குறித்து பொலிசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் மனைவியை கொன்றதை சிவம் ஒப்பு கொண்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், வரதட்சனை விடயத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் மாலாவின் கழுத்தை நெரித்து சிவன் கொலை செய்துள்ளார்.

இந்த கொலையை மறைக்க, ஒரு டிராவல் பேக்கிற்குள் மாலாவின் உடலை வைத்து, அவர் மீது 20-க்கும் மேற்பட்ட ஜீன்ஸ் பேண்ட்களை வைத்து அடுக்கி சாலை ஓரத்தில் வீசிவிட்டார்.

பின்னர் மனைவி காணாமல் போனதாக பொலிசில் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து சிவனை கைது செய்த பொலிசார் அவரின் பெற்றோர், சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்