சிறுமி ஆஷிபா பாலியல் வன்கொடுமை... என்ன சொன்னார் பிரதமர் மோடி..?

Report Print Athavan in இந்தியா

உன்னாவ் மற்றும் கத்துவாவில் நடைபெற்ற பலாத்கார நிகழ்வுகளை பற்றி மோடி இதுவரை ஒன்றும் சொல்லாததை ஊடகங்கள் கிண்டல் செய்துவருகின்றன.

உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் 18 வயது மகளை பாலத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் குல்தீப் சிங்கின் சகோதரர் தாக்கியதில் அந்தப் பெண்ணின் தந்தை மரணம் அடைந்தார். இதன் காரணமாக குல்தீப் சிங் மற்றும் அவர்து சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மிர் மாநிலம் கத்துவா பகுதியில் இந்துக்கள் சிலர் எட்டு வயது இஸ்லாமிய சிறுமியை மயக்க மருந்து கொடுத்து பல முறை பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர். அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை அளித்து வழக்கு பதிவு செய்ய அங்குள்ள பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை டெல்லியில் நடத்தினார். இதில் அவரது சகோதரி பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி ஒன்றுமே கூறாததை ஊடகங்கள் கிணடல் செய்து வருகின்றன. மோடி வாயை மூடி இருக்கும் ஒரு படத்தை வெளியிட்டு “ உன்னாவ் மற்றும் கத்துவா பலாத்காரங்களை பற்றி மோடி தெரிவித்தது இது தான் என குறிப்பிட்டுள்ளன”. மேலும் அதன் கீழே அவர் உண்மையாக இதுகுறித்து பேசும் போது செய்தி செய்தி அப்டேட் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்