நெஞ்சை உருக்கும் கொடூரம்! இறக்கும் தருவாயிலும் பலாத்காரம்- திடுக்கிடும் உண்மைகள்

Report Print Fathima Fathima in இந்தியா

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களும், பல்வேறு பிரபலங்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், குற்றப்பத்திரிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதில் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம், மற்றும் முதல் குற்றவாளி என்று முன்னாள் அரசு அதிகாரி சாஞ்சி ராம் பெயர் இடம்பெற்றுள்ளது.

கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி ஆஷிபா, காட்டுப்பகுதியில் குதிரை மேய்ப்பதை பலமுறை சாஞ்சி ராமும், அவரது மகன் விஷால், அவரது நண்பர் பர்வேஷ் பார்த்துள்ளனர்.

கடந்த ஜனவரி 10ம் திகதியே சிறுமியை பின்தொடர்ந்து சென்று கடத்தினர், பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.

தற்போது கைதாகி சிறையில் உள்ள தீபக் காஜூரியாவுக்கு ஆஷிபாவை மறைத்து வைத்திருந்த இடம் தெரியும், வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.1.5 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.

ஒவ்வொரு முறையும் மிக கொடூரமான முறையில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கடைசியாக ஆஷிபாவை கொலை செய்யும் முன்கூட விஷால் என்ற சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.

தொடர்ந்து தீபக் காஜூரியா, ஆஷிபாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார், இதில் அவளது உயிர் பிரியாத நிலையில், விஷால் கழுத்தை திருப்பியும், கல்லால் அடித்தும் கொலை செய்துள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்