ஜெயலலிதாவை போட்டு தள்ளியது இவர்கள் தான்: பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

மோடி பின்னாடி இயங்கி கொண்டிருக்கும் மதவாதி சக்திகளில் குறிப்பிட்ட சிலர் தான் ஜெயலலிதாவை கொலை செய்தார்கள் என நடிகர் மன்சூர் அலிகான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அரசியல் கருத்துகளை தொடர்ந்து வெளிப்படையாக கூறி வருபவர் ஆவார்.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் மன்சூர் அலிகானும் அதில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மோடி பின்னாடி இயங்கி கொண்டிருக்கும் மதவாதி சக்திகளில் குறிப்பிட்ட சிலர் தான் ஜெயலலிதாவை கொலை செய்தார்கள்.

ஆண்மையோடு இருந்த முதல்வரை கொலை செய்துவிட்டு, இன்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ வைத்து அவர்களின் சொத்துக்களை பாதுகாத்து வருகிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்