ஆடையை களைந்து சோதனை: பெண் உதவி இயக்குனர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Fathima Fathima in இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கருப்புசட்டை அணிந்து கொண்டு நடந்த போராட்டத்தின் போது பொலிசார் ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதாக பெண் உதவி இயக்குனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

சென்னை விமான நிலையம் உட்பட பல இடங்களில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு பலரும் போராடினர், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் திரைப்பட உதவி இயக்குனர்கள் சிலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஆலந்துர் செல்ல முயன்றுள்ளனர்.

விமான நிலையம் சென்று பிரதமருக்கு எதிராக போராடலாம் என்ற எண்ணத்தில் அவர்களை கைது செய்த பொலிசார், வடபழனியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

அப்போது பெண் உதவி இயக்குனர்கள் சிலரின் ஆடைகளை களைந்து பொலிசார் சோதனையிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அனைவருக்கும் மத்தியில் வைத்து இச்சோதனை நடந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனினும் இக்குற்றச்சாட்டுகளை வடபழனி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்