மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வீசிய கணவர்: காரணம் என்ன?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவியை கொலை செய்து சடலத்தை துண்டு துண்டாக வீசிய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் ஷஜன். இவர் மனைவி லீனா. ஷஜனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் அதை லீனா கண்டித்துள்ளார்.

இதையடுத்து லீனாவை கொல்ல முடிவெடுத்த ஷஜன் கடந்த 2007-ஆம் ஆண்டு அவர் முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் லீனாவின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு துண்டு துண்டாக இருந்த சடலம் லீனாவுடையது தான் என கண்டுப்பிடித்தனர்.

பின்னர் ஷஜனை கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஷஜனுக்கு ஆயுள் தண்டனையும் 50000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதோடு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அழித்ததாக தனியாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 25000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்