ஒரு தமிழனாக தலை குனிகிறேன்: அடுத்து நிகழவிருப்பது தெரியவில்லை என பிரபல பாடகர் வருத்தம்

Report Print Santhan in இந்தியா

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகராக தான் வருத்தமடைந்துள்ளதாக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், கலை மற்றும் விளையாட்டு மனிதனின் சோகங்களை மறக்கச் செய்து மகிழ்ச்சி கொள்ளச் செய்பவை.

கேதர் ஜாதவ், பில்லிங்ஸ், பிராவோ, ஜடேஜா உள்ளிட்டோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போதைய அசிங்கமான உலகத்துடன் ஒப்பிடுகையில் மிகச்சிறப்பான உலகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், இதுவே கலையையும், விளையாட்டையும் சிறப்புடையதாக ஆக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் மிகவும் நேசித்த கலைஞர்கள், மனிதர்களால் ஏற்பட்ட வன்முறையால் தான் தலைகுனிவதாகவும், தவறாக வழிநடத்தப்பட்ட சிலரால் ஒரு தமிழனாக தான் தலைகுனிவதாகவும் கூறியுள்ளார்.

ஒரு தமிழனாக புலியை வாலில் கட்டிவிடப்பட்டுள்ளது போல் உள்ளதாகவும், அடுத்து என்ன நிகழும் என்று தெரியாத சூழலே நிலவுவதாகவும் ஸ்ரீநிவாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பதிவேற்றம் செய்த சில மணி நேரங்களிலே அவர் உடனடியாக அவர் பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் காவேரி மேலாண்மை விவகாரம் தொடர்பாக சமீபத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியின் போது சென்னை ரசிகர்கள் சிலர் சென்னை வீரர்கள் மீது செருப்புகளை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்