நீங்கள் எல்லாம் ஆட்டு மந்தைகள்: நடிகை காயத்ரி டுவிட்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததுடன் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் முதலிடம் பிடித்தது.

இதுகுறித்து நடன இயக்குனரும், பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் கடும் கோபத்துடன் டுவிட் செய்துள்ளார்.

அவர் கூறுகையில், மோடி நமக்கு உதவி செய்யவில்லை என்றால் வேறு யார் உதவுவார்கள்.

#GoBackModi என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்ததற்கு காங்கிரஸ் தான் காரணம்.

ராகுலின் சிறந்த நண்பரும், காங்கிரஸ் கட்சியின் சமூகவலைத்தளங்களை நிர்வகித்து வரும் ரம்யாவுக்கு நிச்சயம் பங்கு உண்டு.

சமூகவலைத்தளங்களின் போலியான முகவரி மற்றும் கட்சிகளுக்கு காங்கிரஸ் பணம் செலவழித்து வருகிறது.

முதலில் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகளுக்காக போராடட்டும்.

அரசியலை பொறுத்தவரை சமூகவலைத்தள விமர்சனங்களை எடுத்துக்கொள்ள மாட்டேன், ஏனெனில் பணம் செலவழித்து யாரோ செய்யும் சதிவேலை இது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரச்சனைகளுக்கு காரணமாக திராவிட கட்சிகளுக்கு எதிராக போராட உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? அவர்களும் தமிழர்கள் தானே, ஏன் நமக்கு நல்லவர்களாக இருக்கவில்லை? நமக்கு ஆதரவாக அவர்கள் நிற்காதது ஏன்?

இன்னும் மக்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்? ஒவ்வொரு விடயத்துக்காகவும் சாலையில் இறங்கி போராடும் நிலையில், ஏன் அவர்களை தேர்ந்தெடுத்தோம்?

உண்மையான தமிழன் மனம் மற்றும் மூளையிலிருந்து சிந்தித்து செயல்பட வேண்டும், ஆட்டு மந்தைகளை போன்று செயல்படாதீர்கள், நீங்கள் குழப்பவாதிகள், எளிதாக உங்களை பணத்தின் மூலம் வாங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிக்பாஸில் கலந்து கொண்ட போது, உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாலேயே என்னை ஒதுக்கினீர்கள், தமிழ் பெண்ணான என்னை ஆதரியுங்கள் என கெஞ்சியும் கூட, தவறானவள் என கூறி என்னை நிராகரித்து, கேரளாவை சேர்ந்தவரை தேர்வு செய்தீர்கள், அதேபோல இப்போதும் ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?

தமிழ் திரையுலகம் என்னை ஆதரிக்காத போது, கேரள திரையுலம் என்னை ஆதரித்தது, எப்போதும் எனக்கு மரியாதை, மதிப்பு உண்டு, ஆனால் பிக்பாஸ்க்கு அடுத்து அனைத்து மாநிலங்களும் முக்கியம், இதுதான் இந்தியனின் சக்தி என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers