கோவில் குருக்களை வெளியே கட்டிப் போட்டு மனைவி படுகொலை: அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கோவில் குருக்களை கட்டிப் போட்டு அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் குருக்களாக இருப்பவர் பிரபு. இவருக்கு பிரியா(24) என்ற மனைவி உள்ளார்.

இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கழிந்தும் குழந்தைகள் இல்லை. சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர் நேற்று காலை 6.15 மணியளவில் வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறையில் மோசமான காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்