மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்: கமல் அதிரடி

Report Print Gokulan Gokulan in இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக மக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் நாடு அதிரும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் பொன்மலையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

முதலில் பொதுக் கூட்டம் என்று அறிவித்து விட்டு பின்னர் கண்டனக் கூட்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யக் கட்சிக்கான பாடல்கள் வெளியிடப்பட்டன.

பின்னர் பேசிய கமல்ஹாசன் , காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழக மக்கள் அமைதியான முறையில் மத்திய அரசிற்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுப்பார்கள் என்றும் கூறினார்.

இதற்கான தீர்வு தமிழக அரசின் கைகளில் இருந்தது என்றும், அதற்கான வழிகளை செய்ய அரசு தவறி விட்டதாககவும் கூறினார்.

தங்களது கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கமளித்த கமல்ஹாசன் கொள்கைகள் கொண்ட கட்சிகளுக்கு வாக்களித்து இதுவரை வாக்காளர்கள் கண்ட பலன் என்ன என்றும் கேட்டார்.

தன்னைப் பற்றிய தமிழக அமைச்சர்களின் பல்வேறு விதமான குற்றசாட்டிற்கு பதிலளித்த கமல்ஹாசன் , சினிமாவில் தான் அரசியல் செய்ததில்லை என்றும் அரசியலில் தான் நடிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

சேர வேண்டிய நேரத்தில் சேர வேண்டியவர்களோடு சேருவோம் என்றும் கூறியுள்ள அவர், காவிரி மேலாண்மை விஷயத்தில் ஒத்துழைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழக மக்கள் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினால் நாடு அதிரும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்