ஐபிஎல் வேண்டாம், காவரி தான் வேண்டும்: கலகலக்கும் சுவர் விளம்பரங்கள்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை ஐபிஎல் அணியின் வருகைக்காக நகரில் வரையப்பட்டுள்ள சுவர் ஓவியத்தில் உள்ள வாசகத்தை அழிக்கும் சிலர் அதற்கு பதிலாக காவரி சம்மந்தமான வாசகத்தை எழுதியுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை மும்பையில் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 10-ஆம் திகதி முதல் போட்டி நடைபெறவுள்ளது.

ஆனால் தமிழகமெங்கும் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என போராட்டம் நடந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.

அப்படி மீறி நடத்தினால் அதை முறியடிப்போம் என சில அரசியல் கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், சுவர்களில் ஆங்காங்கே சென்னை ஐபிஎல் அணியின் வருகைக்காக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

அதில், சென்னை அணிக்கு விசில் போடு என்று எழுதப்பட்டுள்ள வாசகத்தை அடித்து விட்டு WE NEED CAUVERY - DONT WANT IPL (எங்களுக்கு காவிரி வேண்டும் - ஐபிஎல் வேண்டாம்) என்று மாற்றி சில இளைஞர்கள் எழுதியுள்ளனர்.

இளைஞர்கள் சுவர்களில் வாசகத்தை மாற்றி எழுதும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்