40 பெண்களை கொன்ற கொடூரன்: வெளியான அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி சைக்கோ சங்கர் தொடர்பில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவையே அதிர வைத்த சைக்கோ சங்கர் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.

இதனையடுத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின.

குறித்த நபர் இதுவரை 40 சிறுமிகளை ஏமாற்றி கொடூரமாக கொலை செய்துள்ளான். அதில் 32 பேரின் சடலங்களுடன் பாலியல் உறவும் வைத்துக் கொண்டுள்ளான்.

இதில் கொடூரம் என்னவெனில் கொலை செய்யப்பட்ட அனைவரும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சங்கருக்கு 10 வயது இருக்கும்போது இரண்டு இளைஞர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளான். சொக்கலேட் தருவதாக கூறி சங்கரை தனியாக அழைத்து சென்ற இரு இளைஞர்களும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இச்சம்பவத்தால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சங்கர், அதன் பின்னரே சிறுமிகளை திட்டமிட்டு கொலை செய்ய துவங்கியுள்ளான்.

தனியாக சிக்கும் சிறுமிகளை நோட்டமிட்டு அவர்களுக்கு இனிப்பு வகைகளை வாங்கி தந்து தனது நோக்கத்தை நிறைவேற்றி வந்துள்ளான்.

எதற்கும் கட்டுப்படாத சிறுமிகளை இரவோடு இரவாக கடத்திச் சென்றும் கொன்றுள்ளான். சங்கர் தொடர்பான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் ஆயுள் தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி கழுத்து அறுக்கப்பட்டு சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்