இந்தியாவிற்கான முதல் பதக்கம் வென்று ஓட்டுநர் மகன் சாதனை!

Report Print Gokulan Gokulan in இந்தியா

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ட்ரக் ஓட்டுனரின் மகனான குருராஜா இந்தியாவிற்கான முதல் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

இவர் போட்டியின் முதல் நாள் அன்று ஆண்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் 249 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்

கர்நாடகாவை சேர்ந்த விமானப் படை வீரரான குருராஜா, ஸ்னாட்ச் பிரிவில் 111 கிலோவும் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 138 கிலோவும் தூக்கியதன் மூலம் தனது சொந்த சாதனையை சமன் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ட்ரக் டிரைவரின் மகனான குருராஜா தனது ஏழ்மையிலும் விடா முயற்சியுடன் போராடி தனது தீவிர பயிற்சியின் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றார்.

இவரின் இந்த வெள்ளிப் பதக்கத்தின் மூலம் இந்தியாவிற்கான முதல் பதக்கம் வழங்கபட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்