யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் வடமாகாண முதல்வர் சீ.வி. விக்னேஷ்வரனை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஈழ சிறார்களின் கல்விக்காக தனது செலவில் கட்டியுள்ள பாடசாலையை விக்னேஷ்வரனை அழைத்து கருணாஸ் திறந்து வைக்கவுள்ளார்.
இதற்கான முறையான அழைப்பை விடுக்கவே முதல்வரை கருணாஸ் சந்தித்துள்ளார்.
இதன் போது கருணாஸுடன் இணைந்து சட்டத்தரணி க.சுகாஷூம் முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.
முதல்வருடனான சந்திப்புக்கு பின்னர் கருணாஸ் யாழ்ப்பாண செய்தியாளர்களை சந்தித்தார்.