செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் கன்னத்தில் அறைந்த மு.க ஸ்டாலின்: வைரல் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நேற்று திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை அண்ணாசாலையில் நடந்த போராட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது அங்கு போராட்டத்துக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் கூட்டத்தில் ஸ்டாலினுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றார்.

அதனை தடுத்த ஸ்டாலின் இளைஞரின் கன்னத்தில் அறைந்தார். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்