பேஸ்புக் தோழியால் இளைஞருக்கு நேர்ந்த கதி: அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் ஏற்பட்ட பெண்ணுடனான நட்பால், ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துகொடுக்கும் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு பேஸ்புக்கில் கிறிஸ்டைன் லீ வெட்பேக்ஸ் என்ற இளம்பெண் Request கொடுத்துள்ளார்.

அதனை ஏற்றுக் கொண்ட குறித்த இளைஞர், அப்பெண்ணுடன் Chatting, Video Calling என பழகி வந்துள்ளார். அப்போது கிறிஸ்டைன் தான் சிங்கப்பூரில் வசிப்பதாகவும், பல் மருத்துவமனையில் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த இளைஞரின் வாட்ஸ் அப்புக்கு சில புகைப்படங்களும், வீடியோவும் அனுப்பப்பட்டிருந்தது. அதில் குறித்த இளைஞர் ஆபாசமாக இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குறித்த இளைஞருக்கு, மேலும் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், தாங்கள் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால், இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவோம் என கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ரூ.30 ஆயிரத்தை குறித்த இளைஞர் செலுத்தியுள்ளார். அதன் பின்னர், அவர் வீட்டில் கவலையுடன் இருந்துள்ளார். அவரின் நிலையைப் பார்த்த பெற்றோர், இளைஞரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது நடந்தவற்றை அவர் விவரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஐதராபாத் சைபர் கிரைம் பொலிசில் குறித்த இளைஞரின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன் பின்னர், அப்பெண்ணின் பேஸ்புக் Account-ஐ சோதனை செய்த போது அது செயலிழக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்