16 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்து: அவனுடன் சேர்ந்து மற்றொருவரும் உயிரிழந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா

பள்ளி மாணவன் இரு சக்கர வாகனம் ஒட்டி வாலிபர் மீது மோதிய விபத்தில் இருவரும் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த ரோகித் (16) என்ற மாணவன் பதினோராம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், நேற்று முன் தினம் திருமங்கலம் அருகே ரோகித் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையை கடக்க முயன்ற பாபு என்பவர் மீது பைக்கை மோதியுள்ளான்.

இதில் இருவருக்குமே தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

இதனிடையே பொலிசார், 18 வயது கீழ் இருந்த ரோகித்தை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்ட அனுமதித்தால் தாய் மீனா மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்