மூத்த திரைப்பட நடிகர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகினர்

Report Print Raju Raju in இந்தியா

மூத்த திரைப்பட நடிகர் சந்திரமெளலி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

தெலுங்கு திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் சந்திரமெளலி. இவர் கடந்த 1971-ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்த நிலையில் பல திரைப்படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

திரையுலக ஜாம்பவான்களான கிருஷ்ணா, ஷோபன் பாபு, நாகேஷ்வரராவ் போன்றவர்களுடன் இணைந்து சந்திரமெளலி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமில்லாமல் டப்பிங் குரல் கொடுப்பதிலும் கைதேர்ந்தவராக திகழ்ந்தார்.

சில காலமாக பல்வேறு ஆரோக்கிய கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரமெளலி நேற்று காலமானார்.

அவர் இறப்பு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்