திருமணமான சில மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்: அதிர்ச்சியில் கணவர் செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா

திருமணமான சில மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், அவர் கணவரும் விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ரிக்கி (27). இவர் மனைவி பூனம் கய் (25). இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த பூனம் தூக்கில் தொங்கியுள்ளார்.

பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரிக்கி மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் பூனம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பின்னர் மருத்துவமனைக்கு கட்டவேண்டிய பணத்தை வீட்டிலிருந்து எடுத்து வருவதாக கூறி தனது வீட்டுக்கு வந்த ரிக்கி விஷம் குடித்து வீட்டிலேயே உயிரிழந்தார்.

தம்பதியின் இந்த முடிவுக்கு இன்னும் காரணம் தெரியாத நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்