காதல் திருமணம் செய்த மகளை ஒரு வருடம் கழித்து தீர்த்து கட்டிய குடும்பம்: ஏன் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
1165Shares

இந்தியாவில் காதல் திருமணம் செய்த மகளை அவரது குடும்பத்தினர் ஒரு வருடம் கழித்து வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் பர்வானி பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ் மாலி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சர்ளா மாலி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

பங்கஜ் மாலி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சர்ளா மாலி குடுமத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் சர்ளாவின் சகோதரன் சமீபத்தில் அவரை தொடர்பு கொண்டு அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

அம்மாவின் வீட்டிற்கு சென்ற சர்மிளா கொலை செய்யப்பட்டுவிட்டதாக பங்கஜ் மாலிக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து சர்மிளா குடும்பத்தின் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சர்ளாவின் தந்தை தேவிதாஸ் கோலி (55), தாய் துளசிபாய் (50) மற்றும் சர்ளாவின் சகோதரர் ஹிராலால் (25) ஆகியோரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சர்ளாவின் கொலைக்கு உடந்தையாக இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்