இறந்து போன தாயின் உடலை வைத்து 2 ஆண்டுகள் பென்சன் வாங்கிய மகன்: பயங்கர சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
367Shares

கொல்கத்தாவில் இறந்துபோன தாயின் உடலை பதப்படுத்தி வைத்து 2 ஆண்டுகள் பென்சன் வாங்கிய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுபாபிரதா மஜூம்தார் ( வயது 47) லெதர் டெக்னாலஜி படித்து உள்ளார். இவரது தயார் பினா மஜூம்தார். தந்தை கோபால் மஜூம்தார்.

தாயார் பினா கடந்த 2015 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார். பினா மஜூம்தார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். அவருக்கு பென்சன் வந்து உள்ளது.

இந்நிலையில் தாயின் பென்சன் பணத்தை வாங்க வேண்டும் என்பதற்காக, ரசாயனம் பயன்படுத்தி தனது தாயின் உடலை இரண்டு ஆண்டுகள் பதப்படுத்தி வைத்து, அவரது கைரேகையை பயன்படுத்தி பென்சன் வாங்கியுள்ளார்.

வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரம் பென்சன் தொகையை மாதந்தோறும் பெற்று வந்து உள்ளார்.

சமீபத்தில் பொலிசார் சுபாபிரதா வீட்டில் சோதனை நடத்தி தயார் பினா உடலை கைப்பற்றி உள்ளனர். இதற்கு தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார். தற்போது பொலிசா மகன்- தந்தை ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்