நடுரோட்டில் அள்ளு கிளப்பிய தேவயானி

Report Print Deepthi Deepthi in இந்தியா
848Shares

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர்.

சாலை மறியல், ரயில் போராட்டங்கள் என தமிழகம் இன்று போராட்டத்தால் ஸ்தம்பித்தது.

இன்றைய போராட்டத்தில் அதிக ஹைலைட் 60 வயதான தேவயானி பாட்டி தான். திமுகவை சேர்ந்த தேவயானி, ஆம்பூர் 28வது வார்டின் நகர மகளிர் அணியின் துணை செயலாளர் ஆவார்.

திருப்பத்தூரில் இருந்து வேலூருக்கு சென்ற அரசு அதிவிரைவு பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே தங்க நாற்கர சாலை ஓரம் நின்றது.

இதனை கண்ட தேவயானி பாட்டி கடும் கோபமுற்று, "பஸ் எதுவும் ஓட்டக்கூடாதுன்னு சொல்லியும் ஓட்டுறானுங்க?" என திட்டிக்கொண்டே தள்ளாத வயதில் திமுக கொடியுடன் சாலையின் குறுக்கே தனியாளாக ஓடினார்.

தனியாளாக கொடியுடன் சாலையின் மையத்தில் போய் நின்றுவிட்டார். இதனால் ஓட்டுநரோ பேருந்தை எடுக்க முடியாமல் நிறுத்திவிட்டார்.

தொடர்ந்து, "பஸ்ஸை எடுத்தே... கண்ணாடியை உடைச்சிடுவேன்" என தன் கையில் இருந்த கொடிக்கம்பைக் காட்டி பேசியுள்ளார்.

திமுக உட்பட மற்ற கட்சியினர் தேவயானியை சமாதானம் செய்தனர். அரைகுறை மனதுடன் தேவயாணி ஒப்புக்கொள்ள பேருந்து கிளம்பி சென்றது.

அதன்பின் தனது கட்சியினரோடு சேர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்