சரக்கடிக்க வேண்டும் பொலிசுடன் சண்டை போட்ட திமுக-வினர்: வைரல் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
64Shares

காவிரி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக-வினர் தாங்கள் மது அருந்தியே ஆக வேண்டும் என பொலிசாரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக-வினர் போராட்டம் நடத்தினார்கள்.

சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.

அதே போல மாநிலம் முழுவதும் திமுகவினரை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அக்கட்சியை சேர்ந்த சிலரை பொலிசார் இன்று கைது செய்து ஒரு இடத்தில் தங்க வைத்து கதவை பூட்டினார்கள்.

அப்போது அந்த திமுக-வினர் தாங்கள் மது அருந்த வேண்டும் எனவும் அதை வாங்கி வருமாறும் பொலிசாரிடம் அனுமதி கேட்டனர்.

இதற்கு பொலிசார் அனுமதி மறுக்க, அவர்களுடன் வாக்குவாதத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள்.

மேலும், எல்லா மண்டபங்களிலும் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள கட்சிகாரர்கள் குடிக்கிறார்கள் எனவும், தங்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என அவர்கள் சண்டை போட்டனர்.

ஆனால் கடைசி வரை பொலிசார் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்