ஆந்திராவில் இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது போதையில் வண்டி ஓட்டி கொண்டு வந்த காவலரின் வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்துள்ளார்.
விஜயவாடாவை சேர்ந்தவர் சின்னபட்னி மைத்ரி தேஜஸ்வனி (27). இவர் கடந்த செவ்வாய் கிழமை இரவு ஷாப்பிங் முடித்து விட்டு தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ரீனிவாஸ் என்ற காவலர் குடிபோதையில் தனது பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
மைத்ரியின் வண்டியை ஸ்ரீனிவாஸ் முந்த நினைத்து அதன் மீது வேகமாக மோதியுள்ளார்.
இதையடுத்து மைத்ரியும், அவர் சகோதரரும் சாலையில் கீழே விழுந்ததில் மைத்ரிக்கு தலையில் பலத்த அடிப்பட்டுள்ளது.
இதையடுத்து மைத்ரியை மீட்ட சகோதரர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மைத்ரி கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மைத்ரி மூளை சாவு அடைந்தார்.
இதை தொடர்ந்து பொலிசார் ஸ்ரீனிவாஸை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர், அவர் தற்காலிக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையில் ஸ்ரீனிவாஸ் தவறான செயலில் ஈடுபட்டு உயர் அதிகாரியிடம் மோதி கடந்த 2015-ல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.